அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்
சண்முக பாண்டியன் தன் தந்தை விஜயகாந்த் குறித்து...
நடிகர் சண்முக பாண்டியன் தன் தந்தை விஜயகாந்த்தின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
வளர்ந்துவரும் இளம் கதாநாயகனாக சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான கொம்புசீவி திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அடுத்ததாக, இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய சண்முக பாண்டியன், “என் தந்தையின் (விஜயகாந்த்) வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். அது எளிதானதல்ல. சரியான இயக்குநர் அமைய வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.