FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜன நாயகன், பராசக்தி டிரைலர் தேதிகள்!

ஜன நாயகன், பராசக்தி திரைப்படங்களின் டிரைலர் குறித்து...

31 டிசம்பர் 2025, 4:20 pm IST
பராசக்தி, ஜன நாயகன் போஸ்டர்கள். - படங்கள்: எக்ஸ் / டாவ்ன் பிக்சர்ஸ், அகிம்சா என்டர்டெயின்மென்ட்ஸ்.
பகிர்:

ஜன நாயகன், பராசக்தி திரைப்படங்களின் டிரைலர் தேதிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பண்டிகை வெளியீடுகள் என்றாலே உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் திரைக்கு வருவது கொண்டாட்டமானதுதான். 2026 பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் ஜன நாயகனும் நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தியும் திரைக்கு வருகின்றன.

இருவருக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும் என்பதால் மற்ற திரைப்படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை. ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை மறுவெளியீடு செய்கிறது.

Advertisement

Advertisement

முழுநேர அரசியலுக்கு வந்த பின் விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதியான திரைப்படம் ஜன நாயகன் என்பதாலும் இனி விஜய்யை திரையில் எப்போது பார்ப்போம் எனத் தெரியாததாலும் அவரின் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.

அதேபோல், இயக்குநர் சுதா கொங்காரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் ஜன நாயகன் வெளியான ஒருநாள் கழித்து ஜன. 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தின் டிரைலர் ஜன. 2 ஆம் தேதியும் பராசக்தி டிரைலர் ஜன. 3 ஆம் தேதியும் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments