சந்தீப் ரெட்டி வங்கா - பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?
சந்தீப் ரெட்டி வங்கா - பிரபாஸ் படம் குறித்து...
சந்தீப் ரெட்டி வங்கா - பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைபடங்கள் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் வங்கா.
அனிமல் திரைப்படத்துக்குப் பிறகு தற்போது நடிகர் பிரபாஸுக்காக ஸ்பிரிட் எனும் கதையை எழுதி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தாய்லாந்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய ஷ்ருதி ஹாசன்!
இந்த நிலையில், ஸ்பிரிட் படத்தின் திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் பிரபாஸ் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.