முகப்பு
செய்திகள்

பென்ஸ் படத்தில் மடோனா செபாஸ்டியன்!

எல்சியூ கதைக்குள் இணைந்த மடோனா செபாஸ்டியன்....

Updated On : 10 ஜூன் 2025, 11:34 am IST
நிவின் பாலி, மடோன்னா செபாஸ்டியன்
பகிர்:

நடிகை மடோனா செபாஸ்டியன் பென்ஸ் படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, நிவின் பாலி, மாதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு பென்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எல்சியூ திரைப்படமாக இது உருவாகும் என லோகேஷ் அறிவித்திருந்தார். இப்படத்திற்கு அனிருத், சாம் சிஎஸ், சாய் அபயங்கர் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.

Advertisement

Advertisement

சில நாள்களுக்கு முன் நடிகர் நிவின் பாலி இப்படத்தில் இணைந்ததைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் இயக்கிய லியோ திரைப்படத்தில் மடோனா விஜய்யின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், அப்படத்தில் இறந்தும்விடுகிறார்.

இதனால், லியோவுக்கு முந்தைய கதையாக இப்படம் உருவாகி வரலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments