FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசனில் இணையும் பிரபலங்கள்!

சிலம்பரசனின் அரசன் திரைப்படம் குறித்து...

8 அக்டோபர் 2025, 4:28 pm IST
நடிகர்கள் அமீர், சிம்பு, கிச்சா சுதீப்
பகிர்:

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தின் நடிகர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் வடசென்னையில் நடித்த சில நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு அரசன் எனப் பெயரிட்டுள்ளனர். இப்படமும் வடசென்னை காலகட்டத்துடன் தொடர்புடைய கதையாகவே உருவாகவுள்ளது.

படப்பிடிப்புகான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் புரோமோ அனிருத் பிறந்த நாளான அக். 16 ஆம் தேதி வெளியாகிறதாம். வடசென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ஆனால், அரசனுக்கு அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இப்படத்தில் நடிகர் அமீரின் ராஜன் கதாபாத்திரம் இருக்கிறதாம். அதனால், அமீர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப்பிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கிச்சா சுதீப் ஒப்புக்கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல நடிகர்கள் இப்படத்தில் இணைவதால் அரசன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

summary

reports suggests actors ameer and kichcha sudeep will act in silambarasan's arasan movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments