ஹான்ஸ் ஜிம்மருடன் இணையும் மற்றொரு இந்திய இசையமைப்பாளர்!
பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இந்திய இசையமைப்பாளர் சஷ்வத் சச்தேவ் இணைந்து பணியாற்றுவது குறித்து...
பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பாலிவுட் இசையமைப்பாளர் சஷ்வத் சச்தேவ் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சஷ்வத் சச்தேவ், ‘உரி: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’, ‘கில்’ ஆகிய வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ‘விர்டீ’ எனும் தொலைக்காட்சித் தொடருக்கு சஷ்வத் சச்தேவ் இசையமைக்கின்றார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்டங்களைக் கடந்து இசையமைப்பதில் மிகவும் மகிழ்ச்சி எனவும், மும்பையிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் வந்தாலும் அதே இதய துடிப்புதான் எனவும்; நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, இயக்குநர் நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் உருவாகும், ராமாயணா படத்துக்கு இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விஜே பார்வதி இல்லாமல் பிக் பாஸ் -9 புரோமோ! கமுருதீன் - துஷார் மோதல்!
Bollywood music composer Sashwat Sachdev is reportedly working with famous Hollywood composer Hans Zimmer.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.