FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கார்த்தி - 30 திரைப்படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

கார்த்தி - 30 இசையமைப்பாளர் அறிவிப்பு...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:50 pm IST
நடிகர்கள் கார்த்தி, மீனாட்சி சௌத்ரி
பகிர்:

நடிகர் கார்த்தியின் 30-வது திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.

வா வாத்தியார் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி சர்தார் - 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப். 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் டீசர் காட்சிகள் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது பெரிய பட்ஜெட்டில் பீரியட் திரைப்படமாக உருவாகி வருகிறது.

Advertisement

Advertisement

தற்போது, நடிகர் கார்த்தி தன் 30-வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். மேட் (mad) திரைப்பட பாகங்களை இயக்கிய கல்யாண் சுந்தர் இப்படத்தை இயக்க, நாயகியாக மீனாக்‌ஷி சௌத்ரி நடிக்கிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் புஷ்பா படத்தின் மூலம் பெரிய கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து, தெலுங்கு கமர்சியல் படங்களுக்கு இசையமைத்து வருபவர் நாயகனாக புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

A renowned music composer is composing the music for actor Karthi's 30th film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments