நடிகர் விஷாலின் மகுடம் திரைப்பட டிரைலர் அப்டேட்!
மகுடம் திரைப்பட டிரைலர் தேதி அறிவிப்பு...
நடிகர் விஷாலின் மகுடம் திரைப்பட டிரைலர் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது,
சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் 'மகுடம்’ படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஷால் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இயக்குநராகும் தனது 30 ஆண்டுகால கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியதாக விஷால் கூறியிருந்தார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், இதன் டிரைலர் ஆக. 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. அதே நாளில் நடிகர் சூர்யாவின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படமும் திரைக்கு வருகிறது.
The release date for the trailer of actor Vishal's film Magudam has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.