FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே! சிறப்பு விடியோ வெளியீடு!

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்தின் ஸ்பெஷல் லுக் விடியோ வெளியீடு...

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே சிறப்பு விடியோவில்...
பகிர்:

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் படங்களின் புதிய பாகமான அவெஞ்சர்ஸ் - டூம்ஸ்டே திரைப்படத்தின் சிறப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம் ஆகிய படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களின் இயக்கத்தில் உருவாகும் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் புதிய படம் “அவெஞ்சர்ஸ் - டூம்ஸ்டே”.

மார்வெல் காமிக்ஸ் கதைகளின் சூப்பர் வில்லனான “டாக்டர் டூம்” கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் மார்வெல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியர் இப்படத்தில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், “அவெஞ்சர்ஸ் - டூம்ஸ் டே” படத்தின் ஸ்பெஷல் லுக் எனும் சிறப்பு விடியோவை இன்று (ஆக. 15) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

வரும் டிசம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், கேப்டன் அமெரிக்காவாக நடிகர் கிறிஸ் எவான்ஸ் மற்றும் தோர் கதாபாத்திரத்தில் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வோர்த் ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

summary

A special video for the movie *Avengers: Doomsday* has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments