முகப்பு
செய்திகள்

பிரபல தொழிலதிபரின் மகளைத் திருமணம் செய்யும் நடிகர் பிரபாஸ்?

நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து...

Updated On : 9 ஜூலை 2026, 5:49 pm IST
பிரபாஸ்
பகிர்:

நடிகர் பிரபாஸ் தொழிலதிபரின் மகளைத் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பான் இந்திய சினிமாவின் வணிகத்தைப் பிரம்மாண்டமாக திறந்து வைத்த பாகுபலியால் நடிகர் பிரபாஸ் புகழின், பிரபலத்தின் உச்சிக்கே சென்றார். அப்படம் கொடுத்த வெளிச்சத்தால் அதற்கு முன் பிரபாஸ் யாரென்றே தெரியாதவர்கள் மத்தியில் எல்லாம் நட்சத்திரமாக வலம் வந்தார்.

2010-க்குப் பின் இந்திய சினிமாவின் முதல் பான் இந்திய நாயகன் என்கிற அங்கீகாரமும் வரவேற்பும் பிரபாஸுக்குக் கிடைத்தாலும் நல்ல கதைகள் கிடைக்கவில்லை. பாகுபலிக்குப் பின் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு (சலார் தவிர) எந்த வெற்றிப்படங்களும் பிரபாஸுக்கு அமையவுமில்லை.

Advertisement

Advertisement

ஆக்சனை நம்பி அடி வாங்க, ஆதி புருஷ் என இதிகாசம் பக்கம் சென்றார். அங்கும் ஏமாற்றம் மிஞ்ச ராஜாசாஃப் என்கிற பேய்ப்படத்தில் நடித்தார். ம்ஹூம்... எதுவும் கைகூடாமல் இப்போது இறுதி நம்பிக்கையாக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் இந்தாண்டிற்குள் திருமணம் செய்ய உள்ளதாகவும் இதற்காகவே ஹைதராபாத்தில் ரூ. 250 கோடி மதிப்பில் பிரபாஸ் வீடு கட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

It is reported that actor Prabhas is set to marry a businessman's daughter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments