நல்ல விஷயங்களுக்கு நேரம் தேவைப்படும்... முதல்வர் விஜய்யுடன் நடிகர் ஜெய்!
ஜன நாயகன் படத்துக்குப் பிறகு நடிகர் ஜெய் முதல்வர் விஜய்யைச் சந்தித்தது குறித்து...
ஜன நாயகன படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு நடிகர் ஜெய் முதல்வர் விஜய்யைச் சந்தித்து பேசினார். ”நல்ல விஷயங்களுக்கு நேரம் எடுக்கும்” எனக் கூறியுள்ளார்.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் நடிகராக தனது கடைசி படத்தில் முதல்வர் விஜய் ஜன நாயகன் எனும் படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் ஜனவரியில் வெளியாக இருந்தது. தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால், தேர்தல் முடிந்து கடந்த ஜூலை 23ஆம் தேதி உலகெங்கும் வெளியாகியது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் விஜய்யுடன் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, ரேவதி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்தப் படம் இரண்டு நாளில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நடிகர் ஜெய் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் ஜெய், “நல்ல விஷயங்களுக்கு நேரம் எடுக்கும். சிறப்பான விஷயங்கள் அதற்கான நேரத்தை தேர்வுசெய்யும்” என எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெய், “எனது அண்ணாவை சந்தித்தது மிகவும் இனிமையான நல்வரவேற்பாக இருந்தது. நாங்கள் ஒன்றாக செலவிட்ட நேரத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்க அவரது உடல், பலம், தொடர் வெற்றிகள் பெற வாழ்த்துகள்” எனக் கூறினார்.
நடிகர் ஜெய் 2002ல் விஜய்யுடன் பகவதி படத்தில் தம்பியாக அறிமுகமானார். 'கடைசியாக சட்டென்று மாறுது வானிலை’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கும் டெஸ்லா படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
Jai meets CM Vijay, says "good things take time" after Vijay's farewell film Jana Nayagan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.