FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

15 நிமிடங்கள் மூச்சை அடக்கி ஆச்சரியப்படுத்திய வித்யுத் ஜம்வால்!

மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால்...

வித்யுத் ஜம்வால்
பகிர்:

நடிகர் வித்யுத் ஜம்வால் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

நடிகர் வித்யுத் ஜம்வால் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். கேமிங் கதாபாத்திரமான தால்சிமின் வல்லமை யோகா மற்றும் இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிப்பயட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இப்படத்திற்கான சிறப்பு நிகழ்வில், தால்சிம் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து வித்யுத் ஜம்வால் பகிர்ந்து கொண்டதுடன், யோகி கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஏன் மிகச் சரியான தேர்வு என்பதையும் அனைவருக்கும் நிரூபித்தார். தால்சிம் வேடமிட்ட காஸ்பிளேயர்ஸூடன் மேடையில் அமர்ந்து தொடர்ந்து 15 நிமிடங்கள் தியானம் செய்து தனது யோகக்கலை திறமையை நிரூபித்தார்.

Advertisement

Advertisement

இந்த தியானத்தை அமைதியாக நிறைவு செய்த பிறகு, பதஞ்சலி யோக சூத்திரத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு நுட்பத்தைத் தான் பயன்படுத்தியதாக வித்யுத் ஜம்வால் தெரிவித்தார். இந்த நுட்பம் 15 நிமிடங்கள் மூச்சை அடக்குவதற்கு மட்டுமின்றி, வாழ்க்கையில் பல்வேறு உயரங்களை அடையவும் தனக்கு உதவியதாக அவர் கூறினார்.

மேலும், இந்த நுட்பத்தை இளம் தலைமுறையினருக்கும் தான் கற்றுக் கொடுத்து வருவதாக வித்யுத் தெரிவித்தார். தியானம் செய்வது, எந்தவொரு விஷயமும் முழுமையான பலனை அடைய காலம் தேவை என்பதைப் புரிந்துகொள்வது, தொடர்ந்து முயற்சி செய்வது ஆகியவற்றின் மூலம் நமது இலக்கை அடைய முடியும் என்பதே இதன் நோக்கம் என்றார்.

“இளம் தலைமுறையினரிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கொஞ்சம் நிதானமாக இருங்கள். ‘இதை எப்படி அடைவது?’ என்று கேட்கிறீர்கள். நான் இதை அடைய எனக்கு ஒரு காலம் தேவைப்பட்டது. நம்மைச் சுற்றியிருக்கும் அனைவரும் எதை நோக்கியாவது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதுவும் செய்யாமல் நிதானமாக இருங்கள். அந்தத் திறமை உங்களை வாழ்க்கையில் வெகுதூரம் அழைத்துச் செல்லும். இதைத்தான் நான் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம், 2026 அக்டோபர் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Actor Vidyut Jammwal has amazed everyone by holding his breath for 15 minutes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments