என்னுடைய முதல் காதல்... சிம்புவைச் சந்தித்த மொத ராத்திரி பட நடிகை சுமித்ரா நெகிழ்ச்சி!
மொத ராத்திரி படத்தின் நடிகை சுமித்ரா தேவி நடிகர் சிம்புவைச் சந்தித்தது குறித்து...
மொத ராத்திரி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சுமித்ரா தேவி நடிகர் சிம்புவைச் சந்தித்த பிறகு, “வாழ்க்கையில் சில தருணங்கள் நம் கண்முன்னே நடந்தாலும் அதனை நம்பமுடியாமல் இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடித்து, அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ’மொத ராத்திரி’ என்ற புதிய திரைப்படம் கடந்த ஆக. 21ஆம் தேதி வெளியானது.
புதிதாகத் திருமணமான ஜோடியின் முதலிரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் அனீஷ்மா அனில்குமார் நாயகியாக நடித்துள்ளார். இதில் கதாநாயகனின் தங்கையாக நடித்துள்ள சுமித்ரா தேவிக்கும் ரசிகர்களிடம் மிகுதியான வரவேற்பு கிடைத்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் கவனம்பெற்ற சுமித்ரா தேவி முதல்முறையாக வெள்ளித்திரையில் நடித்துள்ளார். படக்குழுவினரும் அவரும் நடிகர் சிம்புவைச் சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியாக தனது இன்ஸ்டா பதிவில் கூறியிருப்பதாவது:
செப் 12/ 2026 - சனிக்கிழமை
இந்தப் புகைப்படத்துக்கு தலைப்பு மட்டுமே போதாது, முழு நீள பத்தி தேவை.
வாழ்க்கையில் சில தருணங்கள் நம் கண்முன்னே நடந்தாலும் அதனை நம்பமுடியாமல் இருக்கும். என்னுடைய முதல் காதல். திரையில் பார்த்து, தூரத்தில் இருந்தே அவர் மீது பற்று ஏற்பட்டுவிட்டது. அவரது படங்கள் பார்த்து சிரித்து, அவரது தோற்றங்களைப் பார்த்து பைத்தியம் பிடித்திருக்கிறது... என் நெருங்கிய வட்டத்தில் சிம்புவைப் பற்றி லட்சம் முறை பேசியிருக்கிறேன். ஆனால், இந்த நாளில் அவருக்கு சில அடிகள் பக்கத்தில் இருக்கிறேன். நடந்துவிட்டது.
அவருக்கு மிக அருகில் நின்று பார்த்தபோது, என் அனைத்து தன்னம்பிக்கைகளும் உடைந்து போனது. எனது கைகள் நடுக்கத்தினால் உதறின; இதயத்துடிப்புகள் அதிகர்த்தன. என் முகத்தை மறைக்காமல் அவரைச் சரியாகக் கூட பார்க்க முடியவில்லை. என் அன்பானவர் எனக்கு அருகே இருக்கும்போது என்னால் எப்படி சாதாரணமாக இருக்க முடியும்.
இந்தப் புகைப்படங்களை பார்க்கும்போதும், சிறுமி தன்னுடைய மிகப்பெரிய அன்பை நேரில் பார்த்தது போலவே இப்போதும் சிரிக்கிறேன். திரையில் அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். நேரில் பார்க்கும்போது வித்தியாசமாக இருந்தது. மற்றவர்களுக்கு இது வெறுமனே ஒரு புகைப்படமாகவே இருக்கும். ஆனால், எனக்கு நீண்ட நாள்களாக நினைவில் வைத்து நினைத்துக்கொண்டே இருக்கும் ஒரு ஞாபகம். இப்போதும் நடுக்கமாக இருக்கிறது. எப்படி நடந்தது என இப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். நிஜமாகவே இது நடந்துவிட்டதா? என அந்தப் படங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்.
Some moments in life feel so unreal that even when they’re happening right in front of you Modha Rathri actress Sumithra Devi meet STR
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.