FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி: 2028, 2029 ஆண்டுக்கான இடங்கள் அறிவிப்பு!

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி இரண்டு சீசனுக்கான இடங்கள் குறித்து...

15 செப்டம்பர் 2026, 8:42 pm IST
பார்சிலோனா கால்பந்து திடல் - படம்: எக்ஸ் / யுஇஎஃப்ஏ
பகிர்:

ஐரோப்பியாவில் நடைபெறும் பிரதான கால்பந்துத் தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கான (2028, 2029) இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்துத் தொடரான சாம்பியன்ஸ் லீக் சீசன் 2027/ 28, சீசன் 2028/29 இறுதிப் போட்டிக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடப்பு சீசனில் 2026/27 சீசனின் இறுதிப் போட்டி ஸ்பெயினின் அத்லெடிகோ மாட்ரிட் கால்பந்து திடலில் வரும் ஜூன் 5, 2027ல் நடைபெற இருக்கிறது.

Advertisement

Advertisement

அடுத்த சீசன் 2027/ 28 இறுதிப் போட்டி 2028ல் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் திடலில் நடைபெற இருக்கிறது. அதற்கடுத்த சீசன் 2028/29 இறுதிப் போட்டி ஸ்பெயினின் பார்சிலோனாவில் கேம்ப் நௌ திடலில் நடைபெற இருக்கிறது.

இதுவரையான சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட் அதிகமுறை (15) கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் சமீப காலமாக இந்த அணி சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

நடப்பு சீசனில் ஒரு போட்டி முடிவடைந்த நிலையில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி முதலிடமும் பயர்ன் மியூனிக் இரண்டாமிடமும் பார்சிலோனா மூன்றாமிடமும் மான்செஸ்டர் யுனைடெட் நான்காம் இடமும் பெற்றுள்ளன.

ரியல் மாட்ரிட் 13ஆவது இடமும் போடோ/க்ளிம்ப்ட் கடைசி இடத்தில் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

summary

Two iconic venues announcement! Champions League final in 2028 and 2029 respectively

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments