FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வரவேற்புகளைப் பெற்ற மொத ராத்திரி படத்தின் ஓடிடி வெளியீடு!

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற “மொத ராத்திரி” படத்தின் ஓடிடி வெளியீடு அறிவிப்பு...

16 செப்டம்பர் 2026, 9:11 pm IST
மொத ராத்திரி படத்தின் போஸ்டர் - டிஎன்எஸ்
பகிர்:

திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற “மொத ராத்திரி” திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் ’மொத ராத்திரி’.

புதியதாகத் திருமணமான தம்பதியின் முதல் இரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள “மொத ராத்திரி” படம் வரும் செப்.18 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என இன்று (செப். 16) அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் சேத்தன், பகவதி பெருமாள், ஷெல்லி, வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “மொத ராத்திரி” படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

The OTT release date for the movie “Modha Rathiri” has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments