மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா
தில்லியில் உள்ள சர் கங்கா ராம் தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் தலைவர்
புது தில்லி: தில்லியில் உள்ள சர் கங்கா ராம் தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவர் டி.எஸ்.ராணா, செய்தியாளர்களிடம் கூறுகையில், "உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல்நலம் தேறியதால் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்' என்றார்.
69 வயதாகும் சோனியாவுக்கு இதே மருத்துவமனையில் கடந்த ஆண்டு தோள்பட்டை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.