FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு காங்கிரஸ் தடங்கலாக உள்ளது - ஆம் ஆத்மி எம்.பி

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலை ஆம் ஆத்மி கட்சியினர் புறக்கணித்தற்கான காரணத்தை அக்கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலை ஆம் ஆத்மி கட்சியினர் புறக்கணித்தற்கான காரணத்தை அக்கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் ஹரிபிரசாத்தும், ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஹரிவன்ஷ் நாராயணனும் போட்யிட்டனர். இதில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயணன் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  

மாநிலங்களவையில் உள்ள 3 ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் இந்த தேர்தலில் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்காததற்கான காரணத்தை அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,  

Advertisement

Advertisement

"மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு தான் நாங்கள் அவைக்கு சென்றோம். இந்த தேர்தலில் நாங்கள் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தடங்கலாக உள்ளது. ராகுல் காந்தி வந்து வாக்கு சேகரிக்கவில்லை என்றால், வேட்பாளரின் வெற்றிக்கு அவர் எப்படி உறுதியளிப்பார். 

ராகுல் காந்தி ஆதரவு கோரியிருந்தால் நிச்சயம் ஆம் ஆத்மி அவருக்கு ஆதரவாக வாக்களித்திருக்கும். குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் நாங்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு எண்ணற்ற ஆதரவை அளித்திருக்கிறோம். 

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மற்றும் ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை உறுப்பினருக்காக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கேஜரிவாலை புதன்கிழமை அழைத்து வாக்கு சேகரித்தார். அதனை கேஜரிவால் கட்டாயப்படுத்தவில்லை. அதேசமயம் தனது வேட்பாளருக்காக நிதிஷ் குமார் ஆதரவு கோரும் போது ராகுல் காந்தி அதனை செய்யாதது வியப்பளிக்கிறது.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியை வலுவிழக்க காங்கிரஸ் எண்ணுகிறது" என்று அவர் குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments