கோவாவில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம்! விரைவில் தேசியக் கட்சியாகிறது ஆம் ஆத்மி?
கோவாவில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம்! விரைவில் தேசியக் கட்சியாக மாறும்
கோவாவில் மாநிலக் கட்சியாக ஆம் ஆத்மி தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளது.
தில்லியில் இரண்டாவது முறையாக ஆட்சி புரிந்துவரும் ஆம் ஆத்மி கடந்த பஞ்சாப் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து குஜராத், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் கோவாவில் ஆம் ஆத்மி கட்சியை மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில்,
தில்லி மற்றும் பஞ்சாபிற்குப் பிறகு, இப்போது கோவாவிலும் ஆம் ஆத்மி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உள்ளது. இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் கிடைத்தால், நாங்கள் அதிகாரப்பூர்வமாக தேசியக் கட்சி என்று அறிவிக்கப்படுவோம்.
ஒவ்வொரு தொண்டரின் கடின உழைப்பிற்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். ஆம் ஆத்மியின் சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | குஜராத் தேர்தலில் தீவிரம் காட்டும் ஆம் ஆத்மி! கேஜரிவால் நாளை பயணம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.