ஹிமாசல் நிலச்சரிவில் 6 வயது சிறுவன் பலி: நெடுஞ்சாலை மூடல்!
ஹிமாச்சலப் பிரதேசம், சோலன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசம், சோலன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 வயது சிறுவன் பலியானான்.
குலு மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் மீது கற்கள் மற்றும் பாறைகள் விழுந்தது. இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில், 6 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டி மாவட்டத்தின் சுந்தர்நகரைச் சேர்ந்த குடும்பத்தினர் குலுவில் இருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
Advertisement
Advertisement
சோலன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை-5 இல் உள்ள சிம்லா-கல்கா நெடுஞ்சாலை மூடப்பட்டது. மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.