பேறுகால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்திய சிக்கிம் அரசு!
சிக்கிம் மாநில பெண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு பேறுகால விடுப்பு அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.
சிக்கிம் மாநில பெண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு பேறுகால விடுப்பு அளிக்கப்படுவதாகவும், ஆண்களுக்கு ஒரு மாத காலம் விடுப்பு வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்தார்.
சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு விரையில் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை சிறப்பாக கவனித்துக்கொள்ள உதவும் என்று அவர் கூறினார்.
Advertisement
Advertisement
பேறுகால நலச்சட்டம் 1961ன் படி பெண்களுக்கு 6 மாத விடுப்பு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.