அதிமுக மட்டுமல்ல, மேலும் சில கட்சிகளும் பாஜக கூட்டணியிலிருந்து விலகும்: சஞ்சய் ரௌத்
தேசிய ஜனநாயகக் கூட்டணி பலவீனமாக உள்ளது என்றும் அதிமுக மட்டுமல்ல மேலும் சில கட்சிகளும் பாஜக கூட்டணியில் இருந்து விலகும் என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்
தேசிய ஜனநாயகக் கூட்டணி பலவீனமாக உள்ளது என்றும் அதிமுக மட்டுமல்ல மேலும் சில கட்சிகளும் பாஜக கூட்டணியில் இருந்து விலகும் என்று சிவசேனை(உத்தவ் தாக்கரே தரப்பு) எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாங்கள் இந்தியா கூட்டணியை அமைத்தபோதுதான் பாஜகவினருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்த நினைப்பு வந்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மோடி ஒருவரே போதும். ஆனால் இந்தியா கூட்டணி உருவானபோது அவர்கள் கூட்டணிக்கு மோடி ஒருவர் மட்டும் போதுமானதாக இல்லை. அவர்களுக்கு மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் திமுக அணிக்குப் பாதிப்பு?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனை(உத்தவ் தாக்கரே தரப்பு), அகாலி தளம் கட்சிகள் தற்போது இல்லை. இந்த இரு கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உண்மையான பலமான கட்சிகளாக இருந்தன. ஆனால் தற்போது இருக்கும் பாஜக கூட்டணி பலவீனமாக உள்ளது. அதிமுக மட்டுமல்ல, மேலும் சில கட்சிகளும் பாஜக கூட்டணியில் இருந்து உடையும். 2024 ஆம் ஆண்டுக்குள் பாஜக மூழ்கிவிடும்' என்றார்.
முன்னதாக, அதிமுக - பாஜக இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று(திங்கள்கிழமை) நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகுவதாக அதிமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.