FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனம் காட்டும் மோடி அரசு: கார்கே காட்டம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு உறுதியான எதையும் செய்யவில்லை..

29 August 2024, 12:58 pm IST
மல்லிகார்ஜுன கார்கே - Center-Center-Delhi
பகிர்:

பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாகவும் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருவதோடு, பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

Advertisement

Advertisement

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு தீவிரமான பிரச்னை. இந்த குற்றங்களைத் தடுப்பது நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடையேயும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு இழைக்கப்பட்ட எந்த அநீதியும் சகித்துக்கொள்ள முடியாதது, வேதனையானது மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது. பெண்களுக்குச் சம உரிமை வழங்குவது மட்டுமல்ல, பெண்களைப் பாதுகாப்பதும் மிகவும் அவசியம்.

நாட்டில் பெண்களுக்கு எதிராக ஒரு மணி நேரத்திற்கு 43 குற்றங்கள் பதிவாகின்றன. மேலும் நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தலித்-பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நாள்தோறும் 22 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

அச்சம், மிரட்டல், சமூக காரணங்களால் பதிவு செய்யப்படாத எண்ணற்ற குற்றங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடி தனது உரையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பலமுறை பேசியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடந்த 10 ஆண்டுகளாக அவரது அரசு உறுதியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாகப் பாதிக்கப்பட்டவரின் குணாதிசயத்தைப் படுகொலை செய்துள்ளது. இது வெட்கக்கேடானது.

ஒவ்வொரு சுவரிலும் பெண்களைக் காப்போம் என்று ஓவியம் வரைவது சமூக மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கை திறமையாக மாற்றுமா? நமது குற்றவியல் நீதி அமைப்பு மேம்பட்டுள்ளதா? சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினர் பாதுகாப்பான சூழலில் வாழ முயுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments