FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்திய சிறையிலிருந்து 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பியோட்டம்!

மிசோரம் மாநிலத்தின் சிறையிலிருந்து 2 மியான்மர் நாட்டுப் பெண் கைதிகள் தப்பியோடியதைப் பற்றி..

Updated On : 19 டிசம்பர் 2024, 1:23 pm IST
கோப்புப்படம்
பகிர்:

மிசோரம் மாநிலத்தின் சிறையிலிருந்து இரண்டு மியான்மர் நாட்டு பெண் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

கிழக்கு மிசோரமில், மியான்மர் நாட்டுடனான இந்திய எல்லை அமைந்திருக்கும் சம்பாய் மாவட்டத்திலுள்ள சிறையிலிருந்து மியான்மர் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண் கைதிகள் தப்பியோடியுள்ளதாக இன்று (டிச.19) அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த வன்சுயேனி (எ) சுயினுஃபேலி (36) மற்றும் லால்சான்மாவி (44) ஆகிய இருவரும் தகர ஓடுகளினால் செய்யப்பட்ட சிறைக் கழிவறையிலிருந்து தப்பியதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

முன்னதாக 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ந்தேதி அய்சுவாலிலுள்ள பெண்களுக்கான மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த லால்சான்மாவி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர், ஹெராயின் வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்ட போது அவர்கள் அந்த போதைப்பொருளை தப்பியோடிய லால்சான்மாவியிடம் வாங்கியதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த வருடம் (2024) மே 11 அன்று அவர் காவல்துறையால் கைதுச் செய்யப்பட்டிருந்தார்.

தற்போது அவர் மீண்டும் வேறொரு பெண் கூட்டாளியுடன் தப்பியோடியது குறித்து சம்பாய் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments