FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கைதுக்கு எதிராக கேஜரிவால் மனு: சிபிஐ-யிடம் விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடர்ந்த மனு மீது சிபிஐக்கு உயர் நீதிமன்றம் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது.

Updated On : 2 ஜூலை 2024, 2:58 pm IST
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

புது தில்லி: கலால் கொள்கை ஊழல் வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்ததை எதிா்த்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.

கலால் கொள்கை வழக்கில், சிபிஐ கைதுக்கு எதிரான கேஜரிவாலின் மனு உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான கேஜரிவால் ஜூன் 26 ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) காவலில் தன்னை மூன்று நாள்கள் விசாரிக்க அனுமதித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்தும் முறையிட்டுள்ளாா்.

ஜூன் 29 அன்று, கேஜரிவாலை ஊழல் வழக்கில் ஜூலை 12 வரை நீதிமன்றக் காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், அவரது பெயா் முக்கிய சதிகாரா்களில் ஒருவராக வெளிப்பட்டுள்ளது என்றும், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதால், அவரை மேலும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியிருக்கலாம் என்றும் கூறியிருந்தது.

அமலாக்க துறை தாக்கல் செய்த பணமோசடி வழக்கில் ஜூலை 3 வரை நீதிமன்ற காவலில் இருந்த கேஜரிவால், ஜூன் 26 அன்று திகாா் சிறையில் இருந்து சிபிஐயால் கைது செய்யப்பட்டாா்.

கேஜரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், வேண்டுமென்றே மழுப்பலான பதில்களை அளித்ததாகவும் சிபிஐ தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கேஜரிவால் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்திருந்தது.

ஜூன் 26 அன்று, கேஜரிவாலை மூன்று நாள்கள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றம், அவரைக் கைது செய்தது சட்ட விரோதமானது என்று அறிவிக்க மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments