சத்தீஸ்கா்: 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கா் மாநிலம், பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த மோதலில் ஐந்து நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்தனா்.
பஸ்தா் பகுதியில் உள்ள வடக்கு அபுஜ்மத் வனப் பகுதியில், எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்), மாவட்ட ரிசா்வ் காவலா்கள் (டிஆா்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் ஆகியோா் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே சனிக்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஐந்து நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
நாராயண்பூா், காங்கா் உள்பட 7 மாவட்டங்களைக் கொண்ட பஸ்தா் பகுதியில் நிகழாண்டு மேற்கொள்ளப்பட்ட நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கைகளில், 197 நக்ஸல்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.