FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை ஆய்வு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.

Updated On : 25 ஜனவரி 2025, 10:02 pm IST
முதல்வர் யோகி ஆதித்யநாத்.
பகிர்:

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.

முன்னதாக, அவர் ஸ்ரீ கல்யாண் சேவா ஆசிரமத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதி தீர்த்த ஜி மகராஜையும் சந்தித்தார். இதற்கிடையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாஜக எம்பி தினேஷ் சர்மா, "சனாதன கலாச்சாரத்தில் மகா கும்பத்திற்கு முக்கியத்துவம் உண்டு.

குடும்பத்துடன் சேர்ந்து நீராடும்போது நமது சிந்தனை நேர்மறையாக மாறும் என்று கூறப்படுகிறது. பாவம் உடலால் அல்ல, எண்ணங்களால் நிகழ்கிறது. இங்கு வந்து மகான்களை தரிசனம் செய்யும் போது, ​​பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்றார்.

Advertisement

Advertisement

உலகின் மிகப் பெரிய ஆன்மிக சங்கமமாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26 வரை நடைபெறும் மகா கும்பமேளாவில் மொத்தம் 40 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அஜித்துக்கு பத்ம பூஷண், அஸ்வினுக்கு பத்மஸ்ரீ: விருதுகள் அறிவிப்பு!

மகா கும்பமேளா காலகட்டத்தில் அனைத்து நாள்களிலும் நீராடுவது புனிதமானது என்றபோதும் குறிப்பிட்ட சில தினங்களில் நீராடுவது முக்கியத்துவம் வாய்ந்த ‘அமிருத ஸ்நானம்’ என கருதப்படுகிறது. அதன்படி, பெளஷ பெளா்ணமி (ஜனவரி 13), மகர சங்கராந்தி (ஜனவரி 14) ஆகிய இரு முக்கிய தினங்கள் நிறைவடைந்துள்ளன.

அடுத்ததாக, தை அமாவாசை அல்லது மெளனி அமாவாசை தினம் (ஜனவரி 29) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்நாள் 10 கோடி பக்தா்கள் புனித நீராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, மாநில அரசு சாா்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments