FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவிலும் விரைவில் டெஸ்லா! எப்போது?

இந்தியாவில் ஜூலையில் டெஸ்லா ஷோரூம் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்

Updated On : 21 ஜூன் 2025, 1:27 pm IST
Model Y - Tesla
பகிர்:

மின்சார வாகன உற்பத்தியில் பெரிதும் விரும்பப்படும் டெஸ்லா நிறுவனம், தற்போது இந்தியாவிலும் தடம் பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் ஜூலை மாதத்தில், தனது கார் ஷோரூமை டெஸ்லா தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் டெஸ்லா பிரியர்கள் பலரும் நீண்டகாலமாக ஆவலில் உள்ள நிலையில், தற்போது அது சாத்தியமாக உள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில், தற்போது கார் விற்பனையில் மின்சார வாகனங்களே 5 சதவிகிதத்துக்கும் அதிகமாக விற்பனையாவதாக தரவுகள் கூறுகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில்தான், இந்தியாவில் முதலில் மும்பையிலும், தொடர்ந்து தில்லியிலும் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லா கார்களைத்தான் இந்தியாவில் இறக்குமதி செய்யவுள்ளனர்.

Model 3 - Tesla

டெஸ்லாவின் மாடல் ஒய் மற்றும் மாடல் 3 கார்கள்தான் இறக்குமதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்தக் கார்களை விற்பனை செய்யத்தான், டெஸ்லா காப்புரிமைக்கான விண்ணப்பம் செய்துள்ளது. இருப்பினும், இந்த 2 மாடல்களிலும் ஒய் மாடலைத்தான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

மாடல் ஒய் கார்கள், 526 கி.மீ. மைலேஜ் கொடுப்பதுடன், அதிகபட்சமாக 200 கி.மீ. வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், வெறும் 4.6 விநாடிகளில்யே 96 கி.மீ. வேகத்தை எடுக்கும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரில் 8 கேமராக்கள், தானியங்கி எமர்ஜென்ஸி பிரேக்கிங், மோதாமலிருக்க எச்சரிக்கை உள்பட பல அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. டெஸ்லாவின் மாடல் 3, ரூ. 60 லட்சமாகவும், மாடல் ஒய் ரூ. 70 லட்சமாகவும் நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: கலப்புத் திருமணம் செய்த பெண்ணால் 40 பேர் மொட்டை! பரிகாரமா? மூடநம்பிக்கையா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments