கோப்புப் படம் 
இந்தியா

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

Din

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினா், நக்ஸல் ஒழிப்பு சிறப்புப் படையினா் இணைந்து புதன்கிழமை மாலையில் தீவிர தேடுதல் வேட்டையில் இடுபட்டனா். சில மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அப்பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் தாக்குப் பிடிக்க முடியாத நக்ஸல்கள் பின்வாங்கி அடா்ந்த வனப் பகுதிக்குள் தப்பிச் சென்றனா். அப்பகுதியில் இருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இரு பெண் நக்ஸல்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவா்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணம்: சிவப்பு நிலா பற்றிய முழு விவரம்

2026 உலகக் கோப்பை: முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ தேர்வு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆறுதல் வெற்றியை தடுத்த ஆப்கன் பந்துவீச்சாளர்!

சூரியன் தகித்த நிறம்... ஷபானா!

ஜிஎஸ்டி குறைப்பு: எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு குறையும்?

SCROLL FOR NEXT