ஆழ்ந்த பொறுப்புணர்வு! - காமன்வெல்த் நிறைவு விழாவில் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி!
காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில் சங்கர் மகாதேவனின் இசைநிகழ்ச்சி நடைபெறுவது குறித்து...
2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில், பாடகர் சங்கர் மகாதேவனின் இசைநிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளின் நிறைவு விழா, ஓவிஓ ஹைட்ரோ விளையாட்டுத் திடலில் வரும் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், வரும் 2030 ஆம் ஆண்டுக்கான காமென்வெல்த் போட்டிகளை நடத்தவுள்ள இந்தியாவின் பொறுப்பேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில், பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான சங்கர் மகாதேவனின் இசைநிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுபற்றி, சங்கர் மகாதேவன் கூறியதாவது:
“ஒவ்வொரு முறையும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்கையில், அதனோடு ஆழ்ந்த பொறுப்புணர்வும் வருகின்றது. நாங்கள் இந்த இசைநிகழ்ச்சியில் இந்தியாவின் தனித்துவமான உணர்வுகள், பாரம்பரியம் மற்றும் இசையின் தாக்கங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் ” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, காமன்வெல்த் நிறைவு விழாவில் நடைபெறவுள்ள இந்தியாவின் 20 நிமிட பதவியேற்பு நிகழ்ச்சியில், சங்கர் மகாதேவன் உடன் நடிகை மானுஷி சில்லார், பாடகர்கள் பூமி திரிவேதி, இசைக்கலைஞர்கள் சித்தார்த் மகாதேவன், சிவம் மகாதேவன் மற்றும் சித்தார் இசைக்கலைஞர் ரிஷாப் ரிகிராம் சர்மா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் குஜராத்தில் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தின் சிறப்புகளைப் போற்றும் வகையில் இந்தக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Singer Shankar Mahadevan will reportedly perform at the closing ceremony of the 2026 Commonwealth Games.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.