FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குல்காம் பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸ் கண்டனம்

குல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி தனது கண்டனத்தைப் பதிவு செய்திருப்பது பற்றி....

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 8:39 pm IST
குல்காம் - கோப்புப்படம்.
பகிர்:

குல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில், செங்கல் சூளையில் பணியாற்றி வந்த தீபக் ரத்ரே (24) மற்றும் பூபிந்தர் (28) ஆகிய இரண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் குல்காமில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கோழைத்தனமான செயலை எவ்வளவு கண்டித்தாலும் போதாது.

இதில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தத் துயரச் சூழலில் காங்கிரஸ் குடும்பத்தின் இரங்கல்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன. இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பதிவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டம், கேலம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில், வெளி மாநில தொழிலாளா்களைப் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபா்கள் வெள்ளிக்கிழமை மாலை துப்பாக்கியால் சுட்ட பின், தப்பிச் சென்றனா். இதில் சத்தீஸ்கரைச் சேர்ந்த இரு தொழிலாளிகள் படுகாயமடைந்தனா்.

அவா்களில் ஒருவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் முன்பே பலியானார். மற்றொருவா் அனந்த்நாகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காகத் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகள் சுட்டதில் காவல் அதிகாரி ஒருவா் பலியான நிலையில், தற்போது தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

summary

The Congress on Saturday condemned the Kulgam terror attack in which two labourers from Chhattisgarh were killed and demanded the harshest punishment for the culprits.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments