போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே மாணவர்களுகாக துணைநிற்கும் சிஜேபி: சௌரவ் தாஸ்
போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே மாணவர்களுகாக சிஜேபி துணை நிற்பதாக அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேசியது பற்றி...
போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே மாணவர்களுகாக சிஜேபி துணை நிற்பதாக அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) பேசியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற குற்றப் பின்னணி இல்லாத 18 வயதுக்குக் குறைவான மாணவர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் ஜூலை 28 அன்று உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாமல் மாநில அரசுகள் மாணவர்களைக் கைது செய்து வருவதாக குற்றம் சாட்டிய சிஜேபி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
Advertisement
Advertisement
இந்த மனுவை இன்று விசாரித்த இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, “சிஜேபி போராட்ட வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. முந்தைய தீர்ப்பில் பயன்படுத்திய குற்றப் பின்னணி என்ற சொல் கொடிய மற்றும் மோசமான குற்றங்களை செய்தவர்களைக் குறிக்கும்” என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து சிஜேபி செய்தித் தொடர்பாளர் பேசியதாவது:
கடந்த ஜூலை 25 ஆம் தேதி, இளைஞர்களுக்குக் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, அரசாங்கள் எங்களுக்கு சில உத்தரவாதங்களை அளித்தது. அவற்றில் முக்கியமானவை, போராட்டக்காரர்களுக்கு எதிராக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் திரும்பப் பெறப்படும் என்பதும், எதிர்காலத்தில் எந்தவொரு போராட்டக்காரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்படும் என்பதுமாகும்.
அதற்குப் பிறகும், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் போராட்டக்காரர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகள், அவர்கள் கைது செய்யப்பட்டது போன்ற பல தகவல்களை நாங்கள் பெற்றோம். போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே மாணவர்களுடன் சிஜேபி துணை நின்று வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பே, நாங்கள் போராட்டக்காரர்களுக்கு சட்ட மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கினோம். எதிர்காலத்திலும் அதைத் தொடர்வோம். முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுவது குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது என்று சௌரவ் தாஸ் தெரிவித்தார்.
CJP spokesperson Sourav Das stated on Monday (August 3) that the party has stood in support of the students since the very first day of the protest.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.