இ20 பெட்ரோல் விவகாரம்: பிரதமர் இல்லத்தை நோக்கி கேஜரிவால் நாளை பேரணி!
இ20 விவகாரம் தொடர்பாக மோடி இல்லத்திற்குப் பேரணி செல்லும் கேஜரிவால் பற்றி...
இ20 விவகாரம் தொடர்பாக 100 பேருடன் ஆகஸ்ட் 4 (நாளை) பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவிருப்பதாக அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கேஜரிவால் பேசியதாவது,
அமெரிக்காவிலிருந்து எத்தனால் வாங்குவதற்கு இந்தியா டிரம்பின் முன் பணிந்துவிட்டாது. எத்தனால் கலந்த பெட்ரோலை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவிப்பது ஏதோ ஒரு மறைமுக நோக்கத்தை உணர்த்துவதாகத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுக்களை நேரில் ஒப்படைக்கவும், எத்தனால் கலந்த பெட்ரோல் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் நாளை (செவ்வாய்க்கிழமை) 100 பேருடன் பிரதமரின் இல்லத்திற்குச் செல்ல உள்ளதாகத் தெரிவித்தார்.
வாகனங்களில் பல்வேறு சிக்கல்களை மக்கள் எதிர்கொண்டிருந்தாலும் அரசு இதைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் இதில் ஏதோ மறைமுக நோக்கம் இருப்பது தெளிவாகிறது .
அமெரிக்காவிலிருந்து எத்தனால் வாங்குமாறு பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழுத்தம் கொடுப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
இ20 பெட்ரோல் குறித்த கவலைகளை விவாதிக்க நேரம் கோரி கடந்த மாதம் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்கு எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில், இப்போது மனுவை மோடியிடம் நேரில் ஒப்படைக்கவிருக்கிறோம்.
பிரதமரிடம் வழங்கவிருக்கும் கடிதத்தில், பெட்ரோல் நிலையங்களில் தூய பெட்ரோல் மற்றும் இ20 எரிபொருள் ஆகிய இரண்டுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும், எத்தனால் கலந்த பெட்ரோலின் விலையைக் குறைக்க வேண்டும்.
எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக நாங்கள் ஒரு மனு இயக்கத்தைத் தொடங்கியிருந்தோம். 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த வாரம் ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்திருந்த "எத்தனால் டவுன்ஹால்" கூட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாகவும், இதில் ஏராளமானோர் காணொலி வாயிலாக இணைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
100 people to submit petitions against E20 fuel, alleging the Centre is pushing it under pressure from US President Donald Trump.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.