FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தோல்விக்கு காரணம் ராகுல் காந்தி: பாஜக

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்தியே காரணம் என ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 8:32 pm IST
ரவிசங்கர் பிரசாத் - ஏஎன்ஐ
பகிர்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியே காரணம் என பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் இன்று (ஆக. 13) தெரிவித்தார்.

மாணவர்கள் போராட்டத்தில் காவல் துறையின் நடவடிக்கை குறித்து அமித் ஷா பேச வேண்டும் என்பதை முன்னிறுத்தி அவையை நடக்கவிடாமல் தடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:

Advertisement

Advertisement

''எதிர்க்கட்சித் தலைவர் என அறியப்படுபவரின் (ராகுல் காந்தி) அராஜகம், ஒழுக்கமின்மை, பிடிவாதம் காரணமாக ஒட்டுமொத்த அவை நடவடிக்கைகளும் தோல்வி அடைந்துள்ளது. இதனை முழு பொறுப்புணர்வுடன் கூறுகிறேன்.

மாணவர்கள் மீது காவல் துறை தாக்கிய விவகாரத்தில் ஒட்டுமொத்த விவாதத்தையும் கேட்டு ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்க 24 மணிநேரமும் அமரத் தயாராக உள்ளதாக நேற்று அமித் ஷா பேட்டி அளித்ததை நாம் பார்த்தோம்.

விவாதத்துக்கு தயார் என்பதை குறிப்பிடும் வகையில், புள்ளி விவகரங்களுடன் பதில் அளிக்கத் தயார் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் கூறினார். அவைத் தலைவரும் விவாதத்தை நடத்தலாம் எனக் கூறினார். ஆனால் அதற்கு தயாராகாமல், அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற முட்டாள்தனமான கருத்தையே ராகுல் காந்தி வலியுறுத்துகிறார்.

காவல் துறையினரை சுடுவதற்கு உத்தரவிட்டிருந்தால், அமித் ஷா பதவி விலக வேண்டும். அவர் காவல் துறைக்கு உத்தரவிடவில்லை என்றாலும், நிர்வாகம் செய்ய திறமையற்றவர் மற்றும் தகுதியற்றவர் என்று பதவி விலக வேண்டும்.

ராகுல் காந்திக்கு நிர்வாகம் குறித்து அடிப்படை புரிதல் இருக்கிறதா? என்று தெரியவில்லை. உள்துறை அமைச்சரால் நேரடியாக சுடுவதற்கு உத்தரவிட முடியுமா? இதற்கு நெறிமுறைகள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் மற்றும் பலர் உள்ளனர். அவர்களுடனான ஆலோசனைக்கு பிறகே எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியும்'' எனக் குறிப்பிட்டார்.

summary

Monsoon Session sacrificed at altar of Rahul Gandhi's arrogance BJP's Ravi Shankar Prasad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments