ராகுல் காந்திக்கு மனநிலை பாதிப்பு! - அசாம் முதல்வர் கடும் தாக்கு!
தேர்தல் தோல்விகளால் ராகுல் காந்திக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என அசாம் முதல்வர் கடும் தாக்கு...
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சமீபகாலமாக வார்த்தைப் போர் வெடித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களின் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியால் ராகுல் காந்திக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என அவர் மீது தனிப்பட்ட தாக்குதலை அசாம் முதல்வர் சர்மா முன்னெடுத்துள்ளார்.
இதுபற்றி, இன்று (ஆக. 14) செய்தியாளர்களுடன் பேசிய அசாம் முதல்வர் சர்மா கூறுகையில்,
Advertisement
Advertisement
“அவருக்கு (ராகுல் காந்தி) மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பைத்தியக்காரரைப் போல் மாறிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஜனநாயகம், தேர்தல்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில், இந்தியா - சீனா எல்லையிலுள்ள நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் இந்திய படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவிடாமல் சீன படைகள் தடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, அசாமில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் சர்மா ஊழலில் ஈடுபடுவதாகவும், வெறுப்புணர்வைப் பரப்புவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் வார்த்தைகளால் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Assam CM Himanta Biswa Sarma has stated that Rahul Gandhi, is mentally unstable.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.