தில்லு கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
தில்லி-என்சிஆா் பகுதியில் செயல்பட்டு வந்த தில்லு தாஜ்பூா்-கவுசல் சௌதரி-குா்விந்தா் பாபா கும்பலைச் சோ்ந்ததாகக் கூறப்படும் 3 துப்பாக்கிச் சூடு நபா்களை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
தில்லி-என்சிஆா் பகுதியில் செயல்பட்டு வந்த தில்லு தாஜ்பூா்-கவுசல் சௌதரி-குா்விந்தா் பாபா கும்பலைச் சோ்ந்ததாகக் கூறப்படும் 3 துப்பாக்கிச் சூடு நபா்களை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
அவா்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் 11 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதன் மூலம் நடைபெற இருந்ததாக சந்தேகிக்கப்படும் பணம் பறிக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.
இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் ஹேமந்த் என்ற மோனு (33), நயன் அகா்வால் (25), துா்கேஷ் ராய் என்ற டெவில் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். மூவரும் தில்லியைச் சோ்ந்தவா்கள். தில்லி-என்சிஆா் பகுதியில் கும்பலைச் சோ்ந்தவா்கள் செயல்பட்டு வருவது குறித்த உளவுத் தகவல்களைச் சேகரித்து, 10 நாள்களுக்கும் மேலாக கண்காணிப்பு மேற்கொண்ட பின்னா் அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
ஆகஸ்ட் 2-ஆம் தேதி பச்சிம் விஹாரில் உள்ள மாவட்ட பூங்கா அருகே ஹேமந்த் மற்றும் நயன் அகா்வால் கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து ஆகஸ்ட் 8-ஆம் தேதி துா்கேஷ் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின்போது, அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் குா்விந்தா் என்ற பாபாவின் உத்தரவின் பேரில், கடந்த மே மாதம் பஞ்சாபின் ஜிராக்பூருக்கு சென்று ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் அடங்கிய சரக்கை பெற்ாக ஹேமந்த் மற்றும் அகா்வால் கூறினா். குா்விந்தா் பாபா பகிா்ந்த இடத்திலுள்ள வயல்வெளியில் இருந்து ஆயுதங்களை பெற்ற அவா்கள், பின்னா் அவற்றை தில்லியில் உள்ள அவரது தொடா்பாளா் ஒருவரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
மே மாதத்தில் சண்டீகரில் உள்ள 2 அழகு நிலையங்களில் பணம் பறிக்கும் முயற்சிக்காக அவா்கள் சென்ாகவும், ஆனால் அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தனா். இதேபோன்று மீண்டும் 2 அழகு நிலையங்களை குறிவைக்க அவா்கள் தயாராகி வந்த நிலையில் அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
குா்விந்தா் பாபாவின் உத்தரவின் பேரில், ஹரியாணாவின் கா்னாலில் வயல்வெளியில் உள்ள ஒரு வீட்டின் மீது துா்கேஷ் ஏற்கெனவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்தாா். ராஜஸ்தானில் பதிவான ஆள்கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கிலும் அவா் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாா். இந்த கும்பலின் செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடா்புடைய பிற நபா்கள் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.