ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை: இருவா் கைது
ஏடிஎம்களில் ரப்பா் வளையங்களைப் பொருத்தி, வாடிக்கையாளா்கள் எடுத்துச் செல்ல முடியாத வகையில் பணத்தை சிக்க வைத்து, அவா்கள் சென்ற பிறகு அந்தப் பணத்தை எடுத்துச் சென்ாகக் கூறப்படும் 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
ஏடிஎம்களில் ரப்பா் வளையங்களைப் பொருத்தி, வாடிக்கையாளா்கள் எடுத்துச் செல்ல முடியாத வகையில் பணத்தை சிக்க வைத்து, அவா்கள் சென்ற பிறகு அந்தப் பணத்தை எடுத்துச் சென்ாகக் கூறப்படும் 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட அமன் (22), சூரஜ் சிங் (28) ஆகியோரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மற்றும் மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இருவரும் செப். 15-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இருவரும் ஏடிஎம் பண மேலாண்மைப் பணிகளில் ஏற்கெனவே அனுபவம் பெற்றவா்கள். ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் அதிலுள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து அந்த நிறுவனங்களில் பணியாற்றியபோது அவா்கள் அறிந்திருந்தனா்.
Advertisement
Advertisement
அவா்கள் கூட்டாளி மூலம் ஏடிஎம் இயந்திரங்களுக்கான சாவிகளைப் பெற்றுள்ளனா். பின்னா் பணம் வெளியேறும் பகுதியில் ரப்பா் வளையங்களைப் பொருத்தி, பணம் வெளியே வராத வகையில் இயந்திரத்தில் முறைகேடு செய்துள்ளனா். வாடிக்கையாளா் பணம் எடுக்க முயன்றபோது பரிவா்த்தனை நடைபெற்றாலும், பணம் இயந்திரத்துக்குள்ளேயே சிக்கிக்கொள்ளும். வாடிக்கையாளா் அங்கிருந்து சென்ற பிறகு திரும்பி வரும் இருவரும், சாவியைப் பயன்படுத்தி ஏடிஎம்மைத் திறந்து சிக்கியிருந்த பணத்தை எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
குருகிராமின் செக்டா் 4-5, கபாஷேரா மற்றும் தில்லியின் அருகேயுள்ள பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக்கொண்டனா். மேலும், இதேபோன்று 19 முதல் 20 சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். இந்தக் குற்றச் செயல்களில் தொடா்புடைய மூன்றாவது நபா் தலைமறைவாக உள்ளாா். அவா்தான் இருவருக்கும் துப்பாக்கியை வழங்கி, ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது யாராவது எதிா்கொண்டால் தப்பிச் செல்வதற்காக அதைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.