இ20 விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள்: மத்திய அரசைச் சாடும் அகிலேஷ்!
இ10 பெட்ரோல் மீண்டும் வழங்க வேண்டும் அகிலேஷ் முன்வைத்த கோரிக்கை பற்றி..
இ20 பெட்ரோல் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த கவலையை வெளிப்படுத்திய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மத்திய அரசை கடுமையாகச் சாடினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
நாகேஸ்வரனின் கருத்துகளைக் குறிப்பிடும் படத்தைப் பகிர்ந்து, இந்த எரிபொருள் குறித்த அரசின் நிலைப்பாடு என்னவென்று கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement
இ20 பெட்ரோல் வாகனங்களைச் சேதப்படுத்துகிறது. பழைய இருசக்கர வாகனங்களுக்கு இ10 பெட்ரோல் விற்பனை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று அந்தப் படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இ20 விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள் நிலவுவதைச் சுட்டிக்காட்டிய யாதவ், மத்திய அரசா அல்லது ஆலோசகரா யார் சொல்வது சரி? என்று கேள்வி எழுப்பினார்.
இ20 பயன்பாட்டிற்குப் பிறகு தங்கள் வாகனங்களில் கோளாறுகள் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர் வாகன ஓட்டிகள். அதே வேளையில் எரிபொருளில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று அரசு கூறி வருவதையும், ஆனால் ஆலோசகர்கள் அதன் பாதிப்புகள் குறித்து எச்சரித்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு விவகாரங்கள் குறித்துக் கருத்துக் கணிப்புகளை நடத்தும் பாஜக தலைமையிலான அரசு, இ20 தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ளும் மக்களின் கருத்துகளை ஏன் நேரடியாகக் கேட்கவில்லை அவர் கேள்வி எழுப்பினார்.
ஒருபக்கம் அதிக விலை கொண்ட பெட்ரோல் மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகள் என மக்கள் மீது இரட்டைச் சுமையைச் சுமத்துவதாகக் கூறினார்.
வாகன உமிழ்வைக் குறைக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, 20 சதவீத எத்தனால் மற்றும் 80 சதவீத பெட்ரோல் கலவையான இ20-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
ஏப்ரல் 2026 முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் இ20 மட்டுமே கிடைக்கக்கூடிய பெட்ரோல் வகையாக மாறியது. இந்த நடவடிக்கை வாகன உரிமையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் என்ஜின் செயல்திறன் குறைவதையும், எரிபொருள் குழாய்கள் மற்றும் பிற பாகங்கள் சேதமடைவது குறித்த அச்சத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
அதிக எத்தனால் கலவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களின் உரிமையாளர்கள், இ10 போன்ற குறைந்த எத்தனால் கலவை கொண்ட எரிபொருள் கிடைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
president Akhilesh Yadav on Wednesday attacked the Centre over E20 petrol, citing a reported remark by Chief Economic Advisor V Anantha Nageswaran backing E10 petrol and raising concern over the impact of E20 on vehicles.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.