சிஜேபி போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு!
சிஜேபி நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது பற்றி...
சிஜேபி நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 5 நபர் விசாரணைக் குழு வியாழக்கிழமை (ஆக. 20) அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே. 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்ராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்ற சிஜேபி ஆதரவாளர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர். எனவே, இந்தப் போராட்டம் நாடு முழுவதும் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மாணவர்கள் மீது தடியடி நடத்தியதில் முழுமையான விசாரணை தேவை என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தில்லி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இதைத் தொடர்ந்து, தில்லியில் மாணவர்கள் மீது காவல்துறை அத்துமீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, முன்னாள் நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே. ஜா மற்றும் ஷாலிந்தர் கௌர், முன்னாள் சிபிஐ இயக்குனர் ஆர்.கே. சுக்லா மற்றும் ஓய்வுபெற்ற மேகாலயா டிஜிபி எல்.ஆர். பிஷ்னோய் ஆகியோரை உறுப்பினர்களாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
மேலும், மாணவர்களின் போராட்டம் தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகள், டிரோன் மற்றும் கேமரா காட்சிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
A five-member inquiry committee headed by a retired judge was constituted on Thursday (Aug. 20) to investigate the incident where students were subjected to a lathi-charge during a protest organized by the CJP.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.