FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

போராட்டக்காரர்கள் அமைதி, நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்! தில்லி காவல்துறை கோரிக்கை

போராட்டக்காரர்கள் அமைதி, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என தில்லி காவல்துறை கோரிக்கை விடுத்தது பற்றி...

Updated On : 20 ஜூலை 2026, 6:06 pm IST
தில்லி காவல்துறை கூடுதல் ஆணையர் (மக்கள் தொடர்பு அதிகாரி) ராஜீவ் ரஞ்சன் - படம் - பிடிஐ
பகிர்:

போராட்டக்காரர்கள் அமைதி, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என தில்லி காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கடந்த ஜூன் 20 ஆம் தேதி கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் தொடங்கிய போராட்டம் இன்று தீவிரமடைந்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து, போராட்ட களமான ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் இன்று தடியடி நடத்தினர். இதில் இரு தரப்புக்கிடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதுகுறித்து தில்லி காவல்துறை கூடுதல் ஆணையர் (மக்கள் தொடர்பு அதிகாரி) ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள விடியோவில் பேசியதாவது:

போராட்டக்காரர்கள் அனைவரும் அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். அதேவேளையில், எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடக்கூடாது. பணியில் உள்ள காவல்துறையினரின் அறிவுறுத்தல்களின்படி நடந்து கொள்ள வேண்டும்.

வதந்திகள், தவறான தகவல்கள் அல்லது சரிபார்க்கப்படாத கருத்துகள் ஆகியவற்றை எந்தவொரு தளத்தின் மூலமாகவும் நம்பவோ பரப்பவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம். மக்கள் உண்மையான தகவல்களை மட்டுமே நம்புமாறும் தில்லி காவல்துறையினருக்கு தங்களது முழு ஒத்துழைப்பையும் தருமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

summary

The Delhi Police has requested the protesters to maintain calm and restraint.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments