FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!

சிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது பற்றி...

Updated On : 21 ஜூலை 2026, 10:40 am IST
சிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து - PTI
பகிர்:

சிக்கிமில் சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது மீத்தேன் வாயு வெடித்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், வெடிவிபத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கப்பாதையின் நுழைவாயில் இடிந்ததால், 18 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர்.

நாமச்சி மாவட்டத்தில் உள்ள சமர்துங் - ஜோலுங்கே பகுதியில், தேசிய நீர்மின்சக்தி கழகத்தின், டீஸ்டா நிலை - VI நீர்மின் திட்டத்தின் கீழ் சுரங்கக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தேசிய நீர்மின்சக்தி கழகத்தின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் திங்கள்கிழமை சுரங்கத்துக்குள் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், மாலை 3.40 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுரங்கத்துக்குள் இருந்த மீத்தேன் வாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வெடிவிபத்து நடந்தவுடன் சுரங்கத்தின் முன்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால், அவர்கள் தப்பித்தனர். மேலும், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் சிக்கிக் கொண்ட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

அவர்களில் 9 பேர் பலியானதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 18 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அபாயகரமான மீத்தேன் வாயு வெடிப்புக்கு மத்தியில், குறைந்த ஆக்சிஜன் அளவு, பார்வைத்திறன் குறைவு ஆகிய காரணங்களால் மீட்புப் பணிகளைப் பெரிதும் பாதித்துள்ளன.

தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து மீட்புப் பணியைத் தொடர்ந்து வருகின்றனர்.

summary

Explosion at Sikkim tunnel - 9 dead; 18 trapped

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments