FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்: திரிணமூல் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்! பாஜக

கல்யாண் பானர்ஜி எம்.பி. பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி...

Updated On : 22 ஜூலை 2026, 5:58 pm IST
கல்யாண் பானர்ஜி, சமிக் பட்டாச்சார்யா - கோப்புப் படம்
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி தனது எம்.பி. பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சமிக் பட்டாச்சார்யா விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற அவை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், கல்யாண் பானர்ஜிக்கும் பெண் எம்.பி.க்களான மிதாலி பாக், சதாப்தி ராய் மற்றும் ககோலி கோஷ் தஸ்திதார் ஆகியோருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களவையின் விதிகளை மீறிய சொற்களைப் பயன்படுத்தி கல்யாண் பானர்ஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அந்த பெண் எம்.பி.க்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர். ஆகையால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சமிக் பட்டாச்சார்யா பேசுகையில், ”எந்த சந்தர்ப்பத்திலும் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதை பாஜக எதிர்க்கிறது. இந்த விவகாரத்தில் கல்யாண் பானர்ஜி இடைநீக்கம் செய்யப்படுவதை சரி என்று மக்களவைத் தலைவர் எண்ணியதால் அவர் அதை செய்தார். திரிணமூல் காங்கிரஸ் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

West Bengal BJP State President Samik Bhattacharya has commented on the suspension of senior Trinamool Congress leader Kalyan Banerjee from his post as an MP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments