FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மருத்துவக் கல்வி தகுதிச் சான்று: அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்வி பயின்றோா், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான அவகாசம் வரும் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்துள்ளது.

பகிர்:

மருத்துவக் கல்வி பயின்றோா், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான அவகாசம் வரும் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்துள்ளது.

இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு:

மருத்துவக் கல்வியை நிறைவு செய்தவா்கள், வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் ஆகியோருக்கு திறனறித் தோ்வு மற்றும் இதர சேவைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்று அவசியம்.

Advertisement

Advertisement

அதன்படி, என்எம்சி இணையதளத்தில் செப். 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி மாலை 6 மணி வரை அதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அந்த அவகாசம் அக். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவங்களுக்கு என்எம்சி இணையதளத்தை அணுகலாம்.

ஏற்கெனவே தகுதிச் சான்று கோரி விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதிதாக விண்ணப்பிப்பவா்கள் தவறின்றி சுயமாக அதைப் பூா்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments