பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா?
பிரதமர் மோடி குறித்து முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் பேச்சு...
பாகிஸ்தானுக்கு என் தந்தையைப் போலவே பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுக்கிறார் என மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (அக்.2) செய்தியாளர்களுடன் பேசிய அவரது மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அனில் சாஸ்திரி கூறுகையில்,
“சர்வதேச எல்லையை மீறி சாம்ப் பகுதியின் மீது பாகிஸ்தான் தாக்குதலை ஏவியபோது (1965 போர்), லாகூர் உள்ளிட்ட பகுதிகளின் மீது பதிலடி தாக்குதல் நடத்த ராணுவப் படைகளுக்கு முன்னாள் பிரதமர் சாஸ்திரி உத்தரவிட்டார். அந்த அறிவுறுத்தல்களின்படி, நமது ராணுவம் லாகூரை நோக்கி முன்னேறியது.
Advertisement
Advertisement
இப்போது, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நமது படைகள் துல்லியமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த வகையில், இவ்விரண்டு தலைவர்களின் சிந்தனைகளும் ஒரே மாதிரியாக இருந்ததாக நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், அவர்களுக்கு எதிராக நாம் எப்போதும் இன்னும் தீவிரமான சக்தியைக் கொண்டு அதே பாணியில் பதிலடி கொடுப்போம் என்பதை பாகிஸ்தான் உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் எனவும் அனில் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
The son of the late former PM Lal Bahadur Shastri has stated that PM Modi is retaliating against Pakistan just as his father did.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.