பாகிஸ்தானியர்களைச் சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்: இந்தியத் தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம்!
எல்லை தாண்ட முயற்சித்த பாகிஸ்தானியர்களை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
எல்லை தாண்ட முயற்சித்த பாகிஸ்தானியர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், தரன் தாரன் மாவட்டத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர்கள் இருவரை பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று (அக். 2) சுட்டுக்கொன்றனர்.
வழக்கமான ரோந்துப் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
Advertisement
Advertisement
எல்லையைத் தாண்ட முயன்ற இருவரையும் முதலில் பாதுகாப்புப் படையினர் எச்சரித்ததாகவும், எச்சரிக்கையை மீறி இருவரும் முன்னேறி வந்த இருவரும் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தற்காப்புக்காக அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் மற்றொரு நபர் தப்பியோடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்ட நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அவர்கள் எதற்காக எல்லையைத் தாண்ட முயற்சித்தனர்? பயங்கரவாத குழுக்களுடன் அவர்களுக்குத் தொடர்பு உள்ளதா? என புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியானோரின் உடல்களை பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடல்களைப் பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பலியானவர்கள் தற்செயலாக இந்திய எல்லையைக் கடக்க முற்பட்ட பொதுமக்கள் என்றும், அவர்கள் ஊடுருவல்காரர்கள் அல்ல என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்தியத் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆயுதமற்ற பொதுமக்கள் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டது மனித உரிமை மீறல் என்று தெரிவித்த பாகிஸ்தான் அரசு, இதுகுறித்து இந்தியா வெளிப்படையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
Pakistan has condemned the Indian Border Security Force for shooting dead Pakistanis who attempted to cross the border.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.