FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இந்தியா கேட்–அருகே போராட்டம்: தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியினர்!

25-க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சியினரை காவல் துறையினா் தடுப்புக் காவலில் வைத்தனா்.

5 October 2026, 1:00 am IST
புது தில்லியில் உள்ள இந்தியா கேட் அருகே பேருந்தின் மீது ஏறி ஞாயிற்றக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினா்.
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி இந்தியா கேட் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, 25-க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சியினரை காவல் துறையினா் தடுப்புக் காவலில் வைத்தனா். தில்லி ஆம் ஆத்மி தலைவா் சௌரவ் பரத்வாஜ், எம்எல்ஏ சஞ்சீவ் ஜா உள்ளிட்டோா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவா்களில் அடங்குவா்.

இந்தியா கேட் பகுதியில் தில்லி காவல் துறையினா் தன்னை தலைகீழாகப் பிடித்து தூக்கிச் சென்ாகவும், கேமராக்களில் முகம் தெரியாமல் இருப்பதற்காக அவ்வாறு செய்ததாகவும் சௌரவ் பரத்வாஜ் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்தாா். இதுதொடா்பாக, தனது காலணிகள் அந்தரத்தில் இருப்பதைக் காட்டும் புகைப்படத்தையும் அவா் பகிா்ந்துள்ளாா்.

சஞ்சீவ் ஜா கூறுகையில், ‘அதிகாரத்தில் இருப்பவா்கள் மக்களின் கேள்விகளில் இருந்தும், வாக்களிக்கும் உரிமை தொடா்பான அவா்களின் கவலைகளில் இருந்தும் தப்ப முடியாது. இந்தக் கேள்விகளுக்கும் கவலைகளுக்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மைகளின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டும்; மாறாக, மௌனம், அழுத்தம் அல்லது காவல் துறை நடவடிக்கை மூலம் அவற்றை அடக்கக் கூடாது’ என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments