முக்கிய கனிமங்கள் இருப்பு கொள்கை: மத்திய அரசு விரைவில் அறிவிக்க வாய்பபு
முக்கிய கனிமங்களை இருப்பு வைப்பதற்கான கொள்கையை, ஒரு மாதத்துக்குள் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது.
முக்கிய கனிமங்களை இருப்பு வைப்பதற்கான கொள்கையை, ஒரு மாதத்துக்குள் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து புது தில்லியில் மத்திய கனிமங்கள் துறைச் செயலா் கேசவ் சந்திரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முக்கிய கனிமங்களை இருப்பு வைப்பது தொடா்பான கொள்கையை இறுதி செய்வதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது. அந்தக் கொள்கை ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும்.
Advertisement
Advertisement
முக்கிய பேட்டரி பொருள்களுக்கு மதிப்பு கூட்டும் பணிகளை விரைவுப்படுத்தும் நோக்கில், குஜராத், ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் முக்கிய கனிமங்களைப் பதப்படுத்த 4 பிரத்யேக பூங்காகங்களை அமைக்கவும் மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்று தெரிவித்தாா்.
தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களின் வளா்ச்சிக்கு தாமிர‘ம், லித்தியம், நிக்கல், கோபால்ட், அரிய வகை மண் தாதுக்கள் போன்ற முக்கிய கனிமங்கள் அத்தியாவசிய மூலப்பொருள்களான உள்ளன.
காற்றாலை மின் உற்பத்தி, மின்சாரக் கட்டமைப்புகள், மின்சார வாகனங்கள், பேட்டரி தயாரிப்பு ஆகியவற்றிலும் அந்தக் கனிமங்களின் பயன்பாடு விரிவடைந்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.