அரசியல் ஆதாயத்துக்காக எஸ்ஐஆரை தவறாகப் பயன்படுத்தும் மோடி அரசு: ரேவந்த் ரெட்டி
அரசியல் ஆதாயத்துக்காக எஸ்ஐஆர் செயல்முறையை மோடி அரசு தவறாகப் பயன்படுத்துவதாக ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியது குறித்து...
அரசியல் ஆதாயத்துக்காக எஸ்ஐஆர் செயல்முறையை மோடி அரசு தவறாகப் பயன்படுத்துவதாக ரேவந்த் ரெட்டி திங்கள்கிழமை (அக். 12) குற்றம் சாட்டினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டி அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் போன்றவை தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேரணியாகச் சென்று உச்சநீதிமன்றத்தில் இன்று (அக். 12) மனு அளித்தனர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் கூட்டுச் சதி செய்து, வாக்காளர்களின் பெயர்களை நீக்க மோடி அரசு சதி செய்துள்ளது. ஏற்கெனவே வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களின் பெயர்களை நீக்கவும் தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அரசியல் ஆதாயத்துக்காக எஸ்ஐஆர் செயல்முறையை மோடி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவற்றை மத்திய அரசு அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறது.
இது ஜனநாயகத்துக்கு எதிரானது. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குலைக்கப்பட்டால், ஜனநாயக அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்துவிடும் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
Revanth Reddy alleged on Monday (Oct. 12) that the Modi government is misusing the SIR process for political gain.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.