FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வியாபாரம் பாதிப்பு! போராட்டத்தைக் கைவிட ராகுலுக்கு வணிகர்கள் கோரிக்கை!

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தால் பண்டிகை கால வணிகம் பாதிக்கப்படுவது குறித்து...

14 அக்டோபர் 2026, 9:44 pm IST
வெறிச்சோடிய கடைவீதி - பிடிஐ
பகிர்:

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் மேற்கொண்டுவரும் போராட்டத்தால் பண்டிகை கால வணிகம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால், போராட்டத்தை ராகுல் காந்தி கைவிட வேண்டும் என்றும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் ஆங்காங்கே தடுப்புகளை அமைப்பது, சாலையில் செல்ல கட்டுப்பாடுகளை விதிப்பது போன்றவை நவராத்திரி, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து வரும் பண்டிகை கால விற்பனையை பெருமளவு பாதிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாக் வாக்குத்திருட்டு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமல்ல என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி காங்கிரஸ் கட்சி பேரணியாக ஈடுபட்டது. பிறகு உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று மனு அளித்தனர்.

இப்போராட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் மட்டுமின்றி இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய தேசிய மாணவர் அமைப்பு என பல இயக்கங்களும் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை என்பதே வியாபாரிகளின் கவலையாக உள்ளது.

இப்போராட்டத்தால் விழாக்காலத்தையொட்டி நடைபெறும் வணிகம் கடுமையாக பாதிப்பதால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வணிகர்களின் கோர்க்கையாக உள்ளது.

summary

Festive season business hit Traders urge Rahul to call off the protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments