FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்து வரும் திறன்களின் பிரதிபலிப்பு: மோடி பெருமிதம்

ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்து வரும் திறன்களின் பிரதிபலிப்பு என மோடி கூறியிருப்பது தொடர்பாக...

30 வினாடிகள் முன்பு
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்து வரும் திறன்களின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘ஜூசாட்-1ஏ’ என அழைக்கப்படும் ‘இ.ஓ.எஸ்.-5’ பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இது வழக்கமான குறைந்த புவி சுற்றுப்பாதைக்குப் பதிலாக பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ. உயரத்தில் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. இது ஜிஎஸ்எல்வி ரகத்தில் 19-வது ராக்கெட்டாகும்.

Advertisement

Advertisement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட்டானது, 'ஜியோ-இமேஜிங்' (புவி-படமெடுக்கும்) செயற்கைக்கோள் என்று அழைக்கப்படும் ‘இ.ஓ.எஸ்.-5’அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகவும் துல்லியமாகவும் நிலைநிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் மற்றொரு மைல்கல் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

பெருமைக்குரிய தருணம்

இந்த நிலையில், ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்து வரும் திறன்களின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘இஓஎஸ்-05’-ஐ சுமந்தபடி ‘ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட்’ வெள்ளிக்கிழமை (செப். 4) அதிகாலை 2.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது இஸ்ரோவின் மற்றொரு "சிறப்பான சாதனை" மற்றும் நாட்டிற்கான "பெருமைக்குரிய தருணம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விண்வெளிப் பயணம் இந்திய விண்வெளித் துறையின் மற்றொரு "சிறப்பான சாதனை, புதுமை மற்றும் வளர்ந்து வரும் திறன்களை" பிரதிபலிப்பதோடு, நாட்டிற்கான பெருமைக்குரிய தருணமாகும் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் இந்தியத் தொழில்துறைக்கு இடையிலான வளர்ந்து வரும் உறவானது, நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமைமையும் விரிவான பரிமாணத்தையும் அளிப்பதோடு, ஒட்டுமொத்த விண்வெளிச் சூழலமைப்பிலும் நாட்டின் திறன்களையும் பலப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

summary

PM Modi said the mission reflected the "excellence, innovation and growing capabilities" of India's space sector.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments