FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

சட்டப் படிப்புகளின் கால அளவை மறுஆய்வு செய்வது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டக் கல்விக்கு நிபுணர் குழு அமைப்பு அவசியம் என்று தெரிவித்தது.

9 செப்டம்பர் 2026, 4:34 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

சட்டப் படிப்புகளின் கால அளவை மறுஆய்வு செய்வது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டக் கல்விக்கு நிபுணர் குழு அமைப்பு அவசியம் என்று தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2020-ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கை, அனைத்து தொழில்முறை மற்றும் கல்விப் படிப்புகளிலும் 4 ஆண்டு பட்டப் படிப்புகளை ஊக்குவிக்கிறது. ஆனால் இளநிலை சட்டப் படிப்பு, முதுநிலை சட்டப் படிப்பு, அவற்றின் பாடத் திட்டம் ஆகியவற்றை மறுஆய்வு செய்ய இந்திய பார் கவுன்சில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

Advertisement

Advertisement

5 ஆண்டு பிஏ-எல்எல்பி, பிபிஏ-எல்எல்பி சட்டப் படிப்புகளில் கற்பிக்கப்படும் பாடங்களின் அளவுடன் ஒப்பிடும்போது படிப்புக் காலம் அதிகமாக உள்ளது. இது மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் அதிக நிதிச்சுமையை ஏற்படுத்துவதாக உள்ளது.

எனவே எல்எல்பி, எல்எல்எம் பட்டப் படிப்புகளின் கால அளவு, பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய சிறந்த கல்வியாளர்கள், சட்ட நிபுணர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள் அடங்கிய நிபுணர் குழு அல்லது சட்டக் கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், "இது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம். இதில் மத்திய அரசுக்கு முக்கிய பங்குள்ளது. சட்டக் கல்வி மறுஆய்வுக்கு நிபுணர் குழு அவசியம்' என்று தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments